உங்களுடைய புதிய நகரத்தில் நீங்கள் குடியமர உதவிசெய்வதற்காக, ரொறன்ரோ பொது நூலகம் பல சேவைகளை வழங்குகின்றது, அவை அனைத்துமே இலவசமானவை.

எங்களிடம் வருகை தாருங்கள்:

  • நூலக அட்டை (library card) ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். அது இலவசமானது. உங்களுக்குத் தேவையானவை 2 அடையாள ஆவணங்கள் மட்டுமே, ஒன்றில் உங்களுடைய பெயரும் முகவரியும் இருக்க வேண்டும்
  • நூலகத்தின் 100 கிளைகளிலும், இணைய அணுகல், சொல் தொகுப்பான் (word processing) மற்றும் பல தரவுத்தளங்களுடன் இருக்கும் மின்கணினி (computer) ஒன்றைப் பயன்படுத்துங்கள்
  • நூலகக் கிளைகள் அனைத்திலும் இலவசமான wifi உடன் இணையுங்கள்
  • நூலகக் கிளை ஒன்றில் நேரிலோ அல்லது இணையத்திலோ, புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் பலவற்றை இரவல் வாங்குங்கள். நூலக வளங்கள் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் கிடைக்கின்றன
  • வேலை ஒன்றைக் கண்டறிதல், சாரதி அனுமதிப்பத்திரம் ஒன்றைப் பெறல் மற்றும் மேலும் பலவற்றில் உங்களுக்கு உதவக்கூடிய குடியமர்வுப் பணியாளர் (settlement worker) ஒருவரைச் சந்தியுங்கள்
  • • ஆங்கிலத்தைக் கற்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் வகுப்புகளுக்குச் சமூகமளியுங்கள்
  • இரண்டாம் மொழியாக ஆங்கிலம் கற்றல் உள்ளடங்கலான, வயது வந்தோருக்கும் பிள்ளைகளுக்குமான, பலதரப்பட்ட மின்னியல் ஆதாரவளங்களைத் (electronic resources) தரவிறக்கம் செய்யுங்கள்
  • சிறிய வணிகம் ஒன்றை ஆரம்பிக்கும் விதம், குழந்தைகளுக்கான கதைநேரங்கள் மற்றும் வேலை தேடல் உள்ளடங்கலான பல்வேறு தலைப்புகளிலான எங்களுடைய செயல்திட்டங்களுக்குச் (programs) சமூகமளியுங்கள்
  • • 100 கிளைகளிலுமுள்ள நூலகப் பணியாளர்களுடன் தொடர்புகொள்ளுங்கள். உங்களுடைய கேள்விகளை நாங்கள் வரவேற்கின்றோம், அத்துடன் உங்களுக்கு உதவிசெய்வதற்கு ஆவலோடு காத்திருக்கின்றோம். பல்வேறு மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர்களுக்கான அணுகல் எங்களிடம் உண்டு.

ரொறன்ரோ பொது நூலகத்திலுள்ள எங்கள் அனைவரினதும் சார்பில், உங்களை விரைவில் சந்திப்பதற்கும், உங்களுடைய வெற்றிக்காகப் பல ஆதாரவளங்களைப் பகிர்ந்துகொள்ளவதற்கும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்!